பணி ஓய்வுக்கால

அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுதல்.

  1. ஓய்வு பெறுவதற்கு குறிப்பிட்ட உத்தியோகத்தர் தனது தனிப்பட்ட கோப்பில் குறைபாடு உள்ளதா ? என்று தனிப்பட்ட கோவை பொறுப்பான உத்தியோகத்தரிடம் வினாவி அறிந்துகொள்ள வேண்டும்.
  2. ஓய்வு பெறும் அனுமதி பெற்றுக்கொள்வதற்கு ஓய்வு செல்லும் விண்ணப்பப்பத்திரம் பூர்த்தி செய்து உரிய பிரதிகள் 03 உடன் தனது விண்ணப்பப்பத்திரத்தைக் கொடுக்க வேண்டும்.
  3. ஓய்வு பெறுவதற்கு 03 மாத்திரத்திற்கு முன் ஓய்வு ஊதிய இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதான “அ”படிவத்தில் i பகுதி பிரதிகள் 06ஐக் கொண்டு பூர்த்தி செய்து ஒரு பிரதியை ஒரு பிரதியை தனிப்பட்ட முறையில் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டியதுடன், மிகுதிப்பிரதிகள் 05 நிறுவனத் தலைவருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவனத்தலைவர் “அ” படிவத்தில் ii பகுதியைத் தயாரித்து ( பணிக்கொடை கணக்கிட்டு) i இல் பகுதியுடன் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு பதிவுத் தபாலில் மூலம் அனுப்படவுள்ளது.

  • ஓய்வூதிய இலக்கம் மற்றும் பணிக்கொடை நிதியும் பின்பு மாதாந்த ஓய்வு ஊதியம் தயாரித்தல் தொடர்பாக உரிய எழுத்து மூலங்களுடன் ஓய்வூதியக் கோவை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்புவதோடு உரிய கழிவுகள் செய்து பணிக்கொடை ஓய்வூதியம் பெறுபவருக்கு செலுத்த வேண்டும்.

ஓய்வூதியம் தொடர்பாக கீழ்குறிப்பிடப்படும் தகுதிகள் பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

  • நிரந்தர ஓய்வூதியத்துடனான பதவியொன்றாக இருக்க வேண்டும்.
  • புதவியில் நிரந்தரப்படுத்தியிருக்க வேண்டும்.
  • சேவைக்காலம் ஆகக்குறைந்தது 10 வருடங்களாவது இருக்க வேண்டும்.