இலங்கை மக்களின் மொழி உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசகரும மொழிகள் வாரம்
இலங்கை மக்களின் மொழி உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசகரும மொழிகள் வாரம் – அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசகரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையான வாரத்தினைக் கொண்டாடுவதற்காக பிரதான அமைச்சின் மூலம் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
- 2019.07.23 ஆம் திகதி மேல் மாகாண சபையின் புதிய கேட்போர்கூடத்தில் மாகாண சபை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் , ஆங்கில உப தலைப்புக்களுடனான “விசாரனை” எனும் தமிழ்த் திரைப்படம் காண்பிக்கப்படல்.
- 2019.07.26 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் மத்துகம,மிரிஸ்வத்தை கணிஷ்ட வித்தியாலய மாணவரக்ள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் அரசகரும மொழிகள் தின நிகழ்ச்சிகளை நடாத்துதல்.